தெரு நாய்களுக்கு பயந்து, ஓடுவதற்கு பதிலாக ஓலா புக் செய்த பெண் – இணையத்தில் வீடியோ வைரல்!

தெரு நாய்களுக்கு பயந்து, ஓடுவதற்கு பதிலாக ஓலா புக் செய்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெரு நாய்களிடம் தற்காத்துக்கொள்ள குறைந்த தொலைவை கடக்க ஓடுவதற்கு பதிலாக, ஓலா புக் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.  பைக் சவாரிக்கு ஏற்றி சென்ற நபரின் அந்த வீடியோ பதிவில், அந்தப் பெண் OTP-ஐ சவாரி செய்வதுபோல் வீடியோ ஆரம்பிக்கிறது.

அதன் பின்னர், 2 நிமிட பயண நேரத்தை கொண்ட அந்த பெண்ணிடன் டெஸ்டினேசனை பார்த்து ஓலா ஓட்டுநர் ஆச்சர்யமடைய, 180 மீட்டர் தொலைவில் தன்னை இறக்கிவிடச் சொல்லி  ஓட்டுநரிடம் அப்பெண் கேட்கிறார். அதற்கு அவர்,  “நீங்கள் சரியான முகவரியைத்தான் சொல்கிறீர்களா? என்று கேட்க, இறங்க வேண்டிய இடம் அதுதான் என்கிறார்.

குழப்பத்தில் இருந்த ஓலா பைக் ஓட்டுநர், ஏன் இந்தளவு பக்கமாக பைக் சவாரி செய்ய புக் செய்தீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அப்பெண்,  அந்த பகுதியில் தெருநாய்கள் இருப்பதால் நடந்து போக பயமாக இருந்தது. அதனால் தான் பைக் புக் செய்தேன் என்று கூறிய பிறகு, அந்த பெண் சவாரிக்கு 19 ரூபாய் கொடுத்துவிட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் லக்னோவில் அரகேறியிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.