அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் வாபஸ்: முதல்வர்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடந்த…

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களில் 7 ஆயிரத்து 898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 17 ஆயிரத்து 685 ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

“மறப்போம், மன்னிப்போம்” என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு குற்றவியல் வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசின் நல்ல முடிவை ஏற்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஊக்கமுடன் பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply