“நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” – முதலமைச்சர் #MKStalin பதிவு!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆயிரம்…

"Wishing my friend Rajinikanth a speedy recovery" - Chief Minister #MKStalin posts!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சிகிச்சைக்கு அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. காலை 6 மணி முதல் அவருக்கு மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.