இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: நியூசி. கேப்டன் திடீர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. 8 விக்கெட்…

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி, தனி விமானத்தில் நேற்று ஜெய்ப்பூர் வந்தது. இந்திய அணி, ரோகித் சர்மா தலையில் டி-20 போட்டியில் களமிறங்குகிறது.

டிம் சவுதி

பயிற்சியாளராக பதவியேற்றுள்ள ராகுல் டிராவிட் தலைமையில், முதன்முதலாக இந்திய அணி களமிறங்க இருக்கிறது. முதல் டி-20 போட்டி நாளை நடக்கிறது. இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். நவம்பர் 25-ம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், டி20 தொடரில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.