டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் லாக்டவுன் அமல்படுத்த தயார் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காற்று மாசு அளவு AQI 400ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்படி இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசதம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் காற்று மாசு அதிகரிப்பதன் காரணமாக டெல்லியில் வார இறுதி நாட்களில் லாக்டவுன் அமல்படுத்த தயார் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அதேபோல மக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்றும், டெல்லியின் சுற்றுப்புற நகரில் உள்ள விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிக்க கூடாது என்றும் டெல்லி அரசு வலியுறுத்தியுள்ளது.
அதேபோல லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் கட்டுமானம் சார்ந்த நடவடிக்கைகளும், தொழிற்சாலை நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் வார இறுதி நாட்களில் லாக்டவுனை அமல்படுத்த தயாராக உள்ளோம்.” என்று டெல்லி அமைச்சர் கோபால் ராய் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.









