முக்கியச் செய்திகள் சினிமா Instagram News

லியோ படத்தின் சூட்டிங் நிறுத்தப்படுமா? – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

லியோ படத்தின் சூட்டிங் நிறுத்தப்படுமா என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளதால்  விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோவின் ப்ரோமோ வெளியாகி சமூக ஊடகங்களில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் த்ரிஷா. ஏற்கனவே குருவி, கில்லி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த த்ரிஷா தற்போது 5-வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 14 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ரா பகுதியில் நேற்று அதிகாலை 5.01 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனால், லியோ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் நிலநடுக்கம் லியோ படத்தின் படப்பிடிப்பைப் பாதிக்கும் அப்பாயாம் உள்ளதாகப் பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவை சிலிண்டர் வெடிப்பு; ஆளுநர் கருத்து அவசியமற்றது, அவசரமானது – முதலமைச்சர்

Jayasheeba

மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் “மகிழ்” நிறுவனம்

Vandhana

தென்காசி கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்: இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Web Editor