பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சர் டாஸ்மாக்கிற்கு தடை விதிப்பாரா…? -அண்ணாமலை

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால்  டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என்…

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால்  டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள்
பாதயாத்திரை 99வது நாள் பாதயாத்திரை திருப்போரூர் பகுதியில் பஜார் வீதியில்
நடைப்பயணம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஆட்சியில் ஒரு துறை கூட 33 மாத கால ஆட்சியில் உருப்படியாக இல்லை.
ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டும் வருமானம் செல்கிறது. தமிழகத்தில் ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் வேண்டாம். தமிழகத்தின் வளர்ச்சி என்பது, தற்போது  கோபாலபுரம் குடும்பத்தின் வளர்ச்சியாக உள்ளது.

எந்த ஒரு குடும்பத்தில் இவரை அரசு வேலை இல்லையோ, அந்த குடும்பத்திற்கு பாஜக
ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை வழங்கப்படும். பஞ்சுமிட்டாய் தடை பண்ண வேண்டும் என தெரிவித்த மருத்துவத் துறை அமைச்சர் டாஸ்மாக்கை தடை பண்ண வேண்டும்.
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளில் ரசாயனம் கலந்த சாராயம் தயாரிக்கப்படுகிறது.

திராவிட மாடல் ஆட்சி என்பது சொல்லாவதைவிட, ஆமை மாடல் ஆட்சி என்ற பெயர் சொல்லாம். 20 ஆண்டுகளாகத் தமிழகம் பின்னோக்கி செல்கின்றது. திமுக அளித்த வாக்குறுதியில் 20%கூட நிறைவேற்ற வில்லை. மத்திய அரசு 295 வாக்குறுதிகள் நிறைவேற்ற பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.