முக்கியச் செய்திகள் சினிமா

விஜய், அஜித் பட வில்லனுக்கு நிச்சயதார்த்தம்: ஆடை வடிவமைப்பாளரை மணக்கிறார்

பிரபல வில்லன் நடிகர் வித்யுத் ஜாம்வாலுக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’, விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ’அஞ்சான்’ படத்தில் அவர் நண்பராக நடித்திருந்தார். இந்தி நடிகரான இவர், அங்கு பல படங்களில் நடித் துள்ளார்.

இவர் நடித்துள்ள ’காமாண்டோ’ படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இவரும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான நந்திதா மஹத்வானியும் சில மாதங்களாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின் றனர்.

நந்திதா மஹத்வானியும் இந்தி நடிகர் டினோ மோரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததை அடுத்து, வித்யூத்தை நந்திதா காதலிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

Vandhana

கரிசல் இலக்கிய தந்தை கி.ரா காலமானார்!

‘நெற்றிக்கண்’ – புதிய அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

Halley karthi