”உன் மனைவியின் ஆபாசப்படத்தை வெளியிடுவேன்” – கணவரை மிரட்டிய காவலர்

10 லட்சம் ரூபாய் தரவில்லையென்றால் மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடப்போவதாக பெண்ணின் கணவரை மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மண்ணடியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தனது மனைவியுடன் இணைந்து…

10 லட்சம் ரூபாய் தரவில்லையென்றால் மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடப்போவதாக பெண்ணின் கணவரை மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மண்ணடியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தனது மனைவியுடன் இணைந்து முத்தியால்பேட்டையில் கொரியர் கம்பெனி நடத்தி வருகிறார். அப்போது கொரியர் கம்பெனிக்கு வரும் முத்தியால்பேட்டை காவலர் பெஞ்சமின் பிராங்க்ளினும், ஜெயபிரகாஷ் மனைவியும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அவர்களது நட்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியது. அப்போது இருவரும் தனிமையில் இருந்தபோது பெஞ்சமின் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயபிரகாஷை தொடர்பு கொண்ட பெஞ்சமின், உனது மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட போகிறேன். அப்படி செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து, ஜெயபிரகாஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகாரளித்தார். இந்த புகார் தொடர்பாக காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் எண்ணூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பெஞ்சமின் பிராங்க்ளினை பணியிடை நீக்கம் செய்து மாதவரம் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.