ருதுராஜ் சதம் வீண்: சென்னையை சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல் ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல் ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

அணியின் ஸ்கோர் 47 ஆக இருந்தபோது, டுபிளிசிஸ், திவாட்டியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அவர் 25 ரன்கள் எடுத்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா வந் தார். அவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. வெறும் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழக்க, அடுத்து வந்த மொயின் அலி சிறிது நேரம் களத்தில் நின்றார். அவரும் திவாட்டியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் வந்ததும் திரும்பினார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்தாலும் மறுபக்கம் சிறப்பாக ஆடிய ரிதுராஜ் கெய்க்வாட் கடைசி பந்தில் சதம் அடித்து, ஐபில்-லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 101 ரன்களுடனும் ஜடேஜா 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் லெவிஸும் ஜெய்ஸ்வாலும் அதிரடியில் இறங்கினர். சென்னை வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர்கள், முதல் விக்கெட் டுக்கு 5.2 ஓவரில் 77 ரன்கள் குவித்தனர். தாகூர் பந்துவீச்சில் லெவிஸ், 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


பின்னர் ஆசிப் அலி பந்துவீச்சில் ஜெய்ஸ்வால், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந் தார். அவர் 21 பந்துகளில் 50 சதம் எடுத்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சன், ஷிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடினர். சஞ்சு சாம்ப்சன், தாகூர் பந்துவீச்சில் 28 ரன்களில் ஆட்டமிழக்க, துபேவும் பிலிப்ஸும் 17.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். ஷிவம் துபே 42 பந்துகளில் 64 ரன்களும் பிலிப்ஸ் 8 பந்துகளில் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.