மீண்டும் மீண்டுமா….மியான்மரில் தொடர்ந்து 3வது நாளாக நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

மியான்மரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மியான்மரில் மீண்டும் 3வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் சாலையில் இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தது.

மியான்மரில் தொடர்ந்து மீட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 5 இராணுவ விமானங்களில் நிவாரணப் பொருட்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மியான்மருக்கு அனுப்பி வைத்துள்ளது. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மரில் இந்திய என்.டி.ஆர்.எப் குழு களமிறங்கி உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.