புற்று நோய்க்கு எதிராக தனது பங்கு இருக்கும் – ஜி.வி.பிரகாஷ்

புற்று நோய்க்கு எதிராக தன்னோடு சேர்ந்து பயணிக்க விரும்பினால் அதில் எனது பங்கு இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து…

புற்று நோய்க்கு எதிராக தன்னோடு சேர்ந்து பயணிக்க விரும்பினால் அதில் எனது பங்கு இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி இவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

நாம் வாழ்க்கையில் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களே உண்மையான போராட்டக்காரர்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் புற்று நோய்க்கு எதிராக போராடி மீண்டு வர வேண்டும் என்றார். இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தான் பேசியதாகவும், ஒவ்வொருவரும் பாடகராகவும், தலைசிறந்த ஓவியர்களாகவும் என பல திறமைகளுடன் உள்ளனர்.

உலகமே புற்றுநோயை எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கிறது. மருத்துவர்கள் உட்பட பலரும் அதற்காக தன்னை அர்ப்பணித்து புற்று நோய்க்கு எதிரான பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என்றார்.
சினிமாவை தாண்டி பல்வேறு விஷயங்களில் பணிகளை மேற்கொள்ளும் நீங்கள் புற்று நோய்க்கு எதிராக செயல்பட திட்டம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், கண்டிப்பாக அந்த எண்ணம் உள்ளது. அதற்கான தொடக்கம் இன்றிலிருந்து கூட என கூறலாம், இசையை தாண்டி பல விஷயங்களை முன்னெடுப்பதால் இதையும் முன்னெடுக்க தயாராக உள்ளேன். புற்று நோய்க்கு எதிராக என்னோடு சேர்ந்து பயணிக்க விரும்பினால் கட்டாயம் அதில் என் பங்கு இருக்கும் என தெரிவித்தா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.