தேசிங்குராஜா படம் வெற்றி படமாக அமையுமா? – திரை விமர்சனம்!

  நடிகர் விமல் நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தேசிங்கு ராஜா -2 . புதிய கதை களத்துடன் தொடங்கியுள்ள இந்த படத்தில் காவல் துறையில் பணியாற்றும் ஆய்வாளராக நடிகர் விமல்…

 

நடிகர் விமல் நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தேசிங்கு ராஜா -2 . புதிய கதைத்துடன் தொடங்கியுள்ள இந்த படத்தில் காவல் துறையில் பணியாற்றும் ஆய்வாளராக நடிகர் விமல் அறிமுமாகிறார்.

வேறொரு ரியாவின் காவல் அதிகாரியாக குக் வித் கோமாளி புகழ், அழகா பெண் வேடத்தில் நடித்துள்ளார். கதையின் ஹீரோ விமலுக்கும் ,புகழுக்கும் இடையே யார் பெரிய ஆள் என போட்டி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் மகனை காப்பாற்ற வேண்டும் என போராடுகின்றனர். பின்னர் என்ன நடந்தது என்பது தான் படமே, கதை தொடங்கியதே சுமாரான கதையாக தான் தொடங்கியது. போக போக கதையே இல்லாமல் போனது போல் தான் இருந்தது.

தீபாவளி, மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா  வெள்ளைக்காரன் என பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எழிலின் படமா இந்த படத்தை பார்க்க முடியவில்லை.

இயக்குநர் எழில் கொடுக்கும் படங்கள் சாதாரணமாக இருந்தாலும் அவர் படங்களில் வரும் நகைச்சுவைகள் பெரிய அளவில் பேசப்படும். தேசிங்குராஜா-1ல் வரும் சூரி நகைச்சுவைகள் இன்றும் மக்களால் மறக்க முடியாது.

இந்த படத்தில் ரவி மரியா, சிங்கம் புலி, புகழ், மதுரை முத்து என தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நகைசுகை நடிகர்கள் இருந்தும் படத்தில் அந்த அளவிற்கு நகைசுவை இல்லாமல் தான் இருந்தது.

நடிகர் விமல் பல தோல்விப்படங்களுக்கு பின் விலங்கு இணையத் தொடர் மூலம் மீண்டும் திரைக்கு COMEBACK கொடுத்தார். ஆனால் தேசிங்கு ராஜா – 2 வருக்கு வெற்றி படமாக அமையுமா என்பது சந்தேகமாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.