நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனவிலங்களை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் இரண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன் வனப்பகுதி சென்றதாக
தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பத்துக்கு மேற்பட்ட வனத்துறையினர் வனப்பகுதிக்குள் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறையினரை பார்த்ததும் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் தப்பியோடிய நிலையில் 5 பேரை பிடித்துள்ளனர். அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் வனச் சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.







