தலைவாசல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமம் கடைவீதி பகுதியை
செந்தில்குமார் என்பவருக்கும் ஆத்தூர் நேருநகர் பகுதியை அபிராமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடை பெற்றது.
பின்னர் செந்தில்குமாருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தவுடன் அபிராமியை அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு வெளி நாடு சென்று விட்டார். 2018 ஆம் ஆண்டு வெளி நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய செந்தில்குமார் அபிராமியை அழைத்து சென்று
தனிக்குடித்தனம் வைத்துள்ளார்.
அப்போது கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அபிராமி தனது
தாய் வீட்டிற்கே திரும்ப சென்றுள்ளார். அபிராமி குடும்பம் நடத்த வர மறுத்ததால்
செந்தில்குமார் விவாகரத்து கோரியுள்ளார், இந்த வழக்கு நீதிமன்றத்தில்
நடைபெற்று வரும் நிலையில் செந்தில்குமார் கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவபாண்டலம்
பகுதியை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட
நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதையறிந்த அபிராமி கணவர் வீட்டிற்கு சென்று செந்தில்குமாரை குடும்பம் நடத்த வருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த
அபிராமி மாமியார் காந்திமதியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த செந்தில்குமார் முதல் மனைவி அபிராமியை கையை பிடித்து இழுத்து வந்து வீட்டின் வெளியே விட்டுள்ளார். பின்னர் நீதி கேட்டும் கணவர் குடும்பம் நடத்த வருமாறு வீட்டின்
முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ம. ஸ்ரீ மரகதம்







