தென்னிந்திய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்காதது ஏன்? நடிகை பிரியாமணி விளக்கம்!

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்காதது ஏன் என நடிகை பிரியாமணி விளக்கம் அளித்துள்ளார்.  தமிழ்,  தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை பிரியாமணி.  அட்டகாடு என்ற…

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்காதது ஏன் என நடிகை பிரியாமணி விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்,  தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை பிரியாமணி.  அட்டகாடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனவர்.  அதன்பின் தமிழில் இயக்குநர் அமீரின்  பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடித்துள்ள திரைப்படம் மைதான். இத் திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தின் கதாநாயகியாக பிரியாமணி நடித்துள்ளார்.  இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் நடிகை பிரியாமணி.  அப்போது முண்ணனி  நடிகையாக வலம் வரும் நீங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் முண்ணனி கதாநாயகர்களுடன் நடிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.  அதற்கு பதிலளித்த அவர்,

இதை நீங்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும்.  நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஏன் தேர்வுசெய்யப்படவில்லை என்பதில் எனக்கும் ஆச்சரியம் இருக்கிறது. அதற்கு இப்போது வரை விடை கிடைக்கவில்லை.  நான் அவர்களுடன் சேர்ந்து நடித்தாலோ இல்லை அவர்களது எதிரில் நின்று நடித்தாலோ அவர்களை நான் சாப்பிட்டு விடுவேன் (நடிப்புத்திறமையால் அவர்களை வென்று விடுவேன்)  என்று நினைக்கிறார்களாம்.

இதைத்தான் நான் நீண்ட காலமாக கேள்வி பட்டுக்கொண்டிருக்கிறேன்.  ஆனால் அதில் உண்மை இல்லை என்பது எனக்குத் தெரியும்.  இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.  காரணம் என்னவாக இருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும்,  திருப்தியாகவும் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.