ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும்…

ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், விரைவில் ஒரு சிறப்பான மாவட்டமாக திருச்சி உருவாகும் என தெரிவித்தார்.

மேலும், பழைய சாலைகளை அப்புறப்படுத்தி தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது என தெரிவித்த அவர், மில்லிங் செய்யாமல் ரோடு போடப்படுகிறது என்று எனக்கே புகார் வந்தது. ஆனால், கண்டிப்பாக மில்லிங் செய்து தான் சாலைகள் தற்போது அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘பாரம்பரியமாக நடைபெறும் பட்டினபிரவேச நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக்கொடுக்க வேண்டும் – மதுரை ஆதீனம்’

மேலும், 6 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகளை வாங்கி நட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம், டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுவார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், ஈசிஆர் கடற்கரை சாலை என்பதை ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் சாலை’ என்று மாற்றுவது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் மிக தெளிவாக தான் உள்ளனர். ஆனால், ஜெயக்குமார் தான் குழப்பத்தில் உள்ளார் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.