உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன் என மதுரை ஆதீனம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், தருமபுர ஆதின மடத்திற்கு ஆளுநர் வருகை தந்தது தான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்தானதிற்கு காரணம் என தெரிவித்தார். தொடர்ந்து தருமபுர ஆதீன பல்லக்கை, தனது தோளில் வைத்து சுமந்து செல்வேன் என தெரிவித்த அவர், இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
https://twitter.com/news7tamil/status/1521381570132996096
மேலும், தேவார பாடசாலை, தமிழ்மொழி வளர்ப்பு சைவ நெறி சைவத்தையும் தமிழையும் பாதுகாக்கும் ஆதினம் தருமபுர ஆதீனம் என தெரிவித்த அவர், 500ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம் இது என கூறினார். உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை நடத்துவோம் எனவும், பாரம்பரியமாக நடைபெறும் பட்டினபிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








