தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்குறைப்பு…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்குறைப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்படி தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

காலியாக உள்ள பணியிடங்களால் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதிய பணியாளர்கள் இல்லாததால் தான் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது, பணியிடங்களை ரத்து செய்வது ஆகியவற்றை மின்சார வாரியம் கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.