சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குப் பயிற்சிக்காகச் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் யாருக்கும் அங்கிருந்து வெளியே சென்ற நிலையில் செம்மேடு பகுதியில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுபஸ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது எனவும், யாரும் எதிர்பாராத இத்துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் வெளியிட கூடாது என்ற உறுதியில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்ததாகவும்,
சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறைக்கு முறையாக வழங்கி உள்ளதாகவும் ஈஷா யோகா மையம் கூறியுள்ளது.

இவ்வழக்கு குறித்த வதந்திகள் மற்றும் அவதூறுகள் பரப்பப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.







