முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பெற்றோர்களை ஹீரோக்களாக பாருங்கள்; துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் பேட்டி

பெற்றவர்கள் தான் ஹீரோக்கள் மற்றவர்களுக்காக உயிரை இழக்காதீர்கள் என துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடிகர் அஜித்குமார்- ஹெச். வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை, வலிமை
படங்களுக்குப் பிறகு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் துணிவு ஆகும் , விஜய்
நடிப்பில் உருவான வாரிசு படத்துடன் நேரடியாகப் போட்டியிடுவதால், துணிவு படம்
வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்குச் சிறப்புக்
காட்சி வெளியிடப்பட்டது. இதற்காக இரவிலிருந்தே அஜித் ரசிகர்கள் பல்வேறு
கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதே போல சென்னையிலும் கோயம்பேடு ரோகிணி திரையரங்கு மற்றும் காசி தியேட்டர்
போன்ற பகுதிகளில் துணிவுப் படம் நள்ளிரவு ஒரு மணிக்கும் வாரிசுத் திரைப்படம்
அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும்
அதிகளவில் திரண்டனர். தளபதி என விஜய் ரசிகர்களும் தல, ஏ.கே என அஜித்
ரசிகர்களும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

குறிப்பாக ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் இருதரப்பு ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திரையரங்கில் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடர்ந்து காவல்துறை தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார்(19) என்பது தெரியவந்தது.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் இன்று காலை 4
மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உயிரிழந்த பரத் குமாரின் தந்தை ஜானகி ராமன் நரம்பு தளர்ச்சியால் பாதிகப்பட்டு
உடல் நிலை பாதிக்கப்பட்டவர். அதனால் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலையில்
வீட்டிலேயே இருந்து வருகிறார். தாய் லலிதா வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். ஜானகி ராமன் லலிதா தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் மூத்தவர் தான் உயிரிழந்த பரத்குமார்.

பரத்குமார் துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிபிஏ படித்து
வந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக இவர் இரவு நேரங்களில் உணவு டெலிவரி
செய்யும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் மேலும்
இரவு நேரத்தில் வேலை செய்து விட்டு பகலில் படிக்க முடியாத சூழல்
ஏற்பட்டுள்ளது. அதனால் படிப்பை விட்டு விட்டு முழுநேரமாகக் கிடைக்கும் வேலையை
செய்து குடும்ப பாரத்தை சுமந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில்
தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்த பரத்குமார் நேற்று தனது ஏரியா நண்பர்களுடன் படம் பார்க்க
செல்லாமல் வெளி நண்பர்கள் 6 நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார். ஒரு
டிக்கெட் ரூபாய் 2500க்கு வாங்கியதாகவும் அதற்கே டிக்கெட் கிடைக்கவில்லை
எனவும் அவர் தனது நண்பருக்குப் பேசிய ஆடியோவானதும் தற்போது வெளியாகி உள்ளது.

அதே போல அவரது குடும்பத்தார் பேசுகையில் நடிகர்களுக்காக இனியும் யாரும் உயிரை
விடவேண்டாம் எனக்கேட்டு கொண்டனர். நடிகர்கள் யாரும் வரமாட்டார்கள் நண்பரின் குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வார்கள் என அவரது நண்பர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். பெற்றவர்கள் தான் ஹீரோக்கள் மற்றவர்களுக்காக உயிரை இழக்காதீர்கள். நீங்கள் உங்கள் ஹீரோக்களை நேசியுங்கள் படம் பருங்கள் ஆனால் அப்பா அம்மாவை விட பெரிய ஹீரோ யாரும் கிடையாது. அவர்களையும் நேசியுங்கள். ஹீரோக்களும் தங்கள் ரசிகர்கள் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என எடுத்து செல்லுங்கள் என குடும்பத்தார் பேசுகையில் தெரிவித்தனர்.

துணிவு படம் பார்க்க வந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொதுக்குழு சலசலப்பு: ஓபிஎஸ்-ஐ நோக்கி தண்ணீர் பாட்டில் வீச்சு

Halley Karthik

திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

Jayapriya

சாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்பு

EZHILARASAN D