டிவிட்டர் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது. நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு ஊழியர்களுக்கு டிவிட்டர் நிறுவனம் இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில், ட்விட்டரின் கட்டமைப்புகளை அணுகக்கூடிய வசதிகள், ஸ்லாக் மற்றும் அதிகாரப்பூர்வ இமெயில் உள்ளிட்டவற்றை அணுகக்கூடிய வசதிகள் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உலகம் முழுவதும் இருக்கும் ட்விட்டர் ஊழியர்கள் திடீரென இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளானதாக தொடர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தற்போது, விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பான தன்னுடைய விளக்கத்தில், டிவிட்டர் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 32 கோடி ரூபாய்) இழப்பு உண்டாகிறது.
எனவே ஆட்குறிப்பு செய்வதுதான் இப்போது இருக்கும் வழி. வேறு வழியில்லை. அத்துடன் 3 மாதங்களுக்கான பணி நீக்க ஊதியமும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. சட்ட பிரகாரம் ஊழியர்களுக்கு தேவையானதை விட 50 சதவீதம் இந்த பணி நீக்க ஊதியம் என்பது அதிகமே” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.








