‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’-ல் நடித்தது ஏன்? – விமர்சனத்திற்கு பதில் அளித்த நடிகை தமன்னா!

‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இணையத் தொடர்களில் ஆபாசமாக நடித்தது குறித்து நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி…

‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இணையத் தொடர்களில் ஆபாசமாக நடித்தது குறித்து நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல விமர்சனங்களை கடந்தும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றிருந்தது. ராதிகா ஆப்தே. க்யாரா அத்வானி, புமி பட்னேகர், மனிஷா கொய்ராலா, விக்கி கவுசல் உள்ளிட்ட பல நடித்திருந்த அந்த சீரிஸை இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாம் பாகமானது வரும் 29-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனிடையே நேற்று ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ஆந்தாலஜி சீரிஸின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

இதில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, திலோதமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்கள் அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகிய புதிய இயக்குனர்கள் குழு இயக்கி உள்ளனர்.

மேலும் நடிகர் விஜய் வர்மாவை நடிகை தமன்னா காதலித்து வரும் நிலையில் அவருடன் இணைந்தே இந்த லஸ்ட் ஸ்டோரி 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

மேலும், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ஜீ கர்தா தொடரிலும் நடிகர் சுஹைல் நய்யாருடன் தமன்னா நெருக்கமாக நடித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய தமன்னா, அந்தத் தொடரில் பள்ளிப்பருவத்து காதலைக் கூறுவதால் சில இடங்களில் நெருக்கமான காட்சிகள் தேவைப்பட்டதாகவும், இந்த மாதிரியான காட்சிகள் தவிர்க்கமுடியாதவை என்றும், அதனால்தான் தன்னால் நடிக்க முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.