முக்கியச் செய்திகள்

உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்தார்கள்:மாணிக்கம் தாகூர்

பிரதமர் மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு பின்பு மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கே.தொம்பக்குளம் பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை எம்பி மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் குறையாமல் மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார். மேலும், தமிழகத்தில் மதசார்பற்ற நல்லாட்சி அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், உலக நாடுகளில், அதன் தலைவர்கள் முதன்மையாக தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்தார்கள் என்றும், ஆனால் நம்முடைய பிரதமரும், முதல்வரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கொரோனா தடுப்பூசி பொறுத்தவரை விஞ்ஞானிகளின் மிகப்பெரிய வெற்றி என்றும், விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் எனவும் எம்பி மாணிக்கம் தாகூர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெப் தொடரில் பாலிவுட் ஹீரோவுடன் இணைகிறார் சமந்தா

Halley Karthik

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

G SaravanaKumar

”மீண்டும் தங்கப் பறவையாக ஜொலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை”

Web Editor

Leave a Reply