தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 4 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பைப்போர்ஜாய் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், கோவாவுக்கு மேற்கே-தென்மேற்கே 920 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1,050 கி.மீ தொலைவிலும், போர்பந்தரிலிருந்து தென்-தென்மேற்கே 1,130 கி.மீ தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1,430 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பென்சில் நுனியில் சிற்பம், இலை ஓவியம் – அசத்தும் கோவை சிறுவன்… உதவி கோரும் பெற்றோர்!!
இந்த பைப்போர்ஜாய் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக தீவிரமடைந்து கிழக்கு மத்திய அரபிக்கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.