தொடரை கைப்பற்றப் போவது யார்..? இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டி!

ஆப்கானிஸ்தான், யுஏஇ ஆகிய இரு கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான கடைசி டி20 போட்டி  இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையான கடைசி டி20 போட்டி …

ஆப்கானிஸ்தான், யுஏஇ ஆகிய இரு கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான கடைசி டி20 போட்டி  இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையான கடைசி டி20 போட்டி  இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானும்,  2வது போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் (UAE) அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.  இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி கிரிக்கெட்  ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் 41 லட்சம் கார்கள் விற்பனை – அதிகமான கார்களை விற்று மாருதி சுஸுகி அசத்தல்..!

இன்று நடைபெறும் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆப்கானிஸ்தானும், அதே வேளையில் கடந்த ஆட்டத்தை போல இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து தொடரை கைப்பற்ற யுஏஇ அணியும் ஆட உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.