இந்திய ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று கடைசி லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் ஏற்கனவே வெளியேறிவிட்டது. இதுவரை மொத்தம் 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 6 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தம்பதிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் நியூசிலாந்து சென்றுவிட்டார். இதையடுத்து, புவனேஸ்வர் குமார் ஐதராபாத் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றார்.
ஷிகர் தவன், பேர்ஸ்டவ், ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட அதிரடி வீரர்கள் பஞ்சாப் அணியில் உள்ளனர். நிகோலஸ் பூரன், பிரியம் கர்க், ராகுல் திரிபாதி, மார்க்ரம் உள்ளிட்ட வீரர்கள் ஐதராபாத் அணியில் உள்ளனர். ஐதராபாத் அணியும் 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று 8வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு பஞ்சாப் அணியை கடந்த மாதம் 17ம் தேதி சந்தித்தது ஐதராபாத். அந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் அடைந்தது. எனவே, இன்று நடைபெறவுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் முனைப்பு காட்டும். 10 அணிகள் பங்கேற்ற 15வது சீசன் ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் இதுதான். இந்த ஆட்டத்தின் வெற்றித் தோல்வியால் இரு அணிகளுக்கும் பெரிய பாதிப்பு இருக்காது என்றாலும் ஆறுதல் வெற்றியை நோக்கி இரு அணிகளும் விளையாடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையில் ஒளிபரப்புகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இந்த ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாம்.
இன்று ஐபிஎல் கடைசி லீக் ஆட்டம்: ஆறுதல் வெற்றி பெறுமா ஐதராபாத்?
இந்திய ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று கடைசி லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி,…






