சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“அரசியலுக்கு வயது முக்கியமல்ல. மு.கருணாநிதி சக்கர நாற்காலியிலேயே இருந்து முதலமைச்சரானார். மகாவீரர் 92 வயதில் மலேசியாவின் பிரதமாக இருந்தார். Age is just a Number. விரைவில் நல்ல செய்தி வரும். அது எங்கிருந்து வரும் என தெரியாது. நான் அனைத்து தலைவர்களையும் நேசிப்பவர். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் சந்தித்தது இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பிரதமருடன் இணைந்து அவரும் செயல்பட்டு வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பாமக தொண்டர்களுக்கு சோர்வே கிடையாது. அவர்கள் நல்ல செய்தி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். யாரோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து தற்போது கூற முடியாது. இன்னும் 2,3 மாதங்களுக்குப் பிறகு தெரியவரும்.
கூட்டணி யாரோடு வேண்டுமானாலும் அமையலாம். கட்சி யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். விஜய் தொடங்கி இருக்கிறார். அவர் மற்ற கூட்டணியில் இணைவாரா? என்பது தெரியவில்லை. பாமவை பலமாக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அது பலமாகும். தைலாபுரத்தில் அன்புமணி ராமதாசுடன் பேசியதும், உடன்பாடு எட்டியதா என்தும் ரகசியம். ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது”
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.








