உங்கள் ஓட்டு யாருக்கு? ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட அழகிய வீடியோ…

காஷ்மீரின் பனிப்பொழிவு குறித்து இரு சிறுமிகள் அழகாக பேசும் வீடியோ ஒன்றை தொழிலதிபர் ஆனந்த்  மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.  ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால்…

காஷ்மீரின் பனிப்பொழிவு குறித்து இரு சிறுமிகள் அழகாக பேசும் வீடியோ ஒன்றை தொழிலதிபர் ஆனந்த்  மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்ட்டுள்ளது.  மேலும் விமான சேவைகளும் முற்றிலும் தடைப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில்,  மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் இரு சிறுமிகள் காஷ்மீரின் பனிப்பொழிவை குறித்து பேசும் அழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :  ‘நீதி வேண்டும்’ – வைரலாகும் இட்லி ஐஸ்கிரீம்..

வீடியோவை பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளதாவது ;

பனியின் மீது சறுக்குவண்டியா

அல்லது

பனியின் மீது ஷயாரியாவா

எனது ஓட்டு ஷயாரிக்கே..

என பதிவிட்டுள்ளார்.

வீடியோவில் காஷ்மீரின் பனிப்பொழிவு குறித்து இரு சிறுமிகளும் பேசுகின்றனர். இந்த பனிப் பொழிவிற்காக அவர்கள் வேண்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.  மேலும் அவர்களின் சுற்றுப்புறம் வெண்மையான பனிகளால் சூழ்ந்திருப்பது சொர்க்கம் போன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  அந்த பனிப்பொழிவை இருவரும் அழகாக வர்ணித்துள்ளனர்.

இந்த பதிவிற்கு பார்வையாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். க்யூட்,  க்யூட்னெஸ் ஓவர்லோட்,  அழகு,  வாவ்,  மிகவும் அழகு என பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  நேற்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.