முக்கியச் செய்திகள் தமிழகம்

மன்னார்குடி முதல் ரெய்டு வரை; யார் இந்த காமராஜ்?

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். அந்த வரிசையில் சில காலம் இடைவெளி விட்டு முன்னாள் உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது நன்னிலம் எம்.எல்.ஏ.வாகவும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ள காமராஜ் பற்றி பார்ப்போம்.

மன்னார்குடி அருகே உள்ள சோத்திரியத்தில், 1960ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பிறந்தவர் ஆர்.காமராஜ். அவருக்கு லதா மகேஸ்வரி என்ற மனைவியும், இன்பன், இனியன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இருவரும் மருத்துவர்கள். எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள காமராஜ், கல்லூரியில் சேர்வதற்கு முன்னரே அரசியல் ஆர்வம் கொண்டவர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுக ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் மூலம் அதிமுகவில் சேர்ந்தார். ஞானசேகரனின் ஆதவாளராக இருந்த காமராஜ், அப்போது மன்னார்குடி எம்எல்ஏவாக இருந்தவர் ஞானசுந்தரம் ஆதரவாளதாக மாறி, கோட்டூர் யூனியன் அதிமுக செயலாளர் என்கிற, முதல் பதவியைப் பிடித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ‘ஜா’, ‘ஜெ’ என இரண்டு அணிகளாக உடைந்தபோது அதிமுக ஜானகி அணியில் இருந்தவர் காமராஜ். கட்சி பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக பேசியவர் . ஜானகி அணியும் ,ஜெயலலிதா அணியும் ஒன்றாகிவிட, காமராஜும் அமைதியாகக் கட்சியில் ஐக்கியமாகிறார்.

அதன் பின்னர் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் தீவிர ஆதரவாளராக மாற்றிகொண்டார். அதன் பலனாக மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் என அடுத்தடுத்து பதவிகள் காமராஜுக்கு கிடைத்தது. தொடர்ந்து ‘குடவாசல்’ ராஜேந்திரனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியும் காமராஜ் வசம் அடைந்தது.
2001ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி ஆக்கப்பட்ட காமராஜ், 2006 சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011ம் ஆண்டு தேர்தலில் நன்னிலம் தொகுதியில் வெற்றி பெற்ற போதும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. 2011 நவம்பரில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், புத்திசந்திரனிடம் இருந்த உணவுத்துறை காமராஜுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு அன்றைய அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பும் கமாராஜுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைய, உணவுத்துறை அமைச்சராக தொடர்ந்தார் காமராஜ். அமைச்சராக இருந்தபோதே இரண்டுமுறை காமராஜ் தொடர்புள்ள இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆதிமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் கொரொனா தொற்றுக்குள்ளான காமராஜுக்கு, 95% நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடும் போராட்டத்துக்கு பின் மறுபிறவி பெற்றார்.

அதை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நன்னிலம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். இந்நிலையில் இன்று காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!

Halley Karthik

விஜய் பெயரில் திருக்கடையூரில் அர்ச்சனை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

Web Editor

பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Halley Karthik