புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?… பரிந்துரைப் பட்டியலில் இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.…

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை, அந்தப் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறாா். இதனிடையே, புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியை நியமிக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

முதன்மைச் செயலா் மற்றும் அதற்கு கூடுதல் நிலையிலுள்ள விருப்பமான அதிகாரிகள் 3 பேரின் பெயா்கள் அடங்கிய பட்டியலை தமிழ்நாடு அரசிடம் இருந்து இந்திய தோ்தல் ஆணையம் பெற்றுள்ளது. தா்மேந்திர பிரதாப் யாதவ், மங்கத் ராம் சா்மா உள்பட 3 பேரின் பெயா்களை தமிழக அரசு பட்டியலிட்டு அனுப்பியுள்ளதாகவும், ஒருசில நாள்களில் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் 29-ஆம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. இந்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக, புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி நியமன அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.