அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் இசைவு ஆணை தராமல் அளுநர் காலம் தாழ்த்தி வருவதாக முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக நாளேடான முரசொலி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான சி.வி. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் குட்கா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்தது. மேலும் இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியதை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு எழுதிய கடிதததில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சிபிஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்காமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க.வினரை காப்பாற்றுவதற்கு ஆளுநர் ரவி துடித்ததை அறிய முடிகிறது.

ஏற்கனவே ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர். இப்போது குட்கா மாமூல் பேர்வழிகளைக் காப்பாற்றுகிறார். இதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் சனாதன வேஷம் கட்டி ஆடுகிறார் ஆளுநர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: