முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓபிஎஸ்க்கு பதில் யார் ?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அக்கட்சியில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டும் பணியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் வகித்து வரும் பொருளாளர் பதவியில் இருந்துஅவரை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த சூழலில் ஓபிஎஸை அவ்வளவு எளிதாக பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிவிட முடியுமா? அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால்  அடுத்த பொருளாளர் யார் ? என்ற கேள்வி எழுவது இயல்பே. இதுகுறித்து எடப்பாடியின் திட்டம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதிமுகவில் நீண்டநாட்களாக எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்து வரும் நிர்வாகிகளிடம் பேசியபோது, எடப்பாடியை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஒற்றைத் தலைமை கொண்டு வரவே விரும்புகிறார். அதற்காக ஓபிஎஸை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேநேரத்தில் ஓபிஎஸின் நடவடிக்கைகள் கட்சியின் நலனை பாதிக்கும் வகையில் உள்ளதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஜெயகுமார் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள் விரும்புகின்றனர். அப்படி ஒரு முடிவெடுத்தால் அது பாஜகவை நேரடியாக பகைத்து கொண்டதுபோல் ஆகிவிடும். எனவே எந்த விஷயத்தை செய்தாலும் பொறுமையாக கையாள வேண்டும் என எடப்பாடி கருதுகிறார்.

ஓபிஎஸ் ஒருவேளை தொடர்ந்து அதிமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நலனுக்கு எதிராக சென்றால், அந்த சூழ்நிலையில் ஓபிஎஸ் மீது அதிமுக சட்டவிதிகளுக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அப்போது யோசிக்கலாம் என தன்னிடம் ஓபிஎஸ் குறித்து புகார் தெரிவிப்பவர்களிடம் கூறி வருகிறார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு தமக்கு இருப்பதாக ஓபிஎஸ் காட்டி கொள்கிறார். இதற்குரிய பதில் குடியரசுத்தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தெரிந்துவிடும். ஒருவேளை ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுத்தால் அடுத்த பொருளாளராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். காரணம் திமுகவில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த துரை முருகன் பொதுச்செயலாளராக உள்ளார். எனவே அதிமுக அந்த மக்களின் ஆதரவை பெற முனுசாமியை நியமிக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.

கட்சியின் தலைமை கழக செயலாளராக தற்போது எடப்பாடி பழனிசாமி உள்ளார். இவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் தலைமை கழக செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நியமிக்க வாய்புள்ளது என்கின்றனர்.

அதற்கு காரணம் நிரந்தஅவைத் தலைவராக தமிழ் மகன் உசேன்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். அவர் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டவுடன், முழு நேர அவைத்தலைவரை தேர்ந்தெடுக்கும்போது அந்த பதவிக்கு தம்மை நியமிக்க வேண்டும் என ஜெயகுமார் ஏற்கனவே எடப்பாடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் ஜெயக்குமாருக்கு அந்த பதவியை எடப்பாடியால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதற்கு ஈடாக தலைமை கழக செயலாளர் பதவியை அவர் வழங்குவார் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி” – பிரேமலதா விஜயகாந்த

Jayapriya

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை!

Saravana

நீட் தேர்வு தோல்வி பயத்தால் அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை!

Web Editor