இங்கிலாந்தில் குறைந்த காலம் பிரதமாராக பதவி வகித்தவர்கள் யார் யார்?

இங்கிலாந்தில் குறைந்த காலம் பதவி வகித்த பிரதமர்கள் குறித்த தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் தனது பதவியை…

இங்கிலாந்தில் குறைந்த காலம் பதவி வகித்த பிரதமர்கள் குறித்த தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் மற்றும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த் ரிஷிசுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்த தேர்தலில் லிஸ் டிரஸ் 81,326 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக டிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். பொருளாதார நெருக்கடியால் கடும் நெருக்கடியை சந்தித்ததை தொடர்ந்து லிஸ்டிரஸ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பிரதமரான ஒன்றரை மாதத்தில் (45 நாட்கள்) லிஸ்டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இங்கிலாந்தின் மிக குறைந்த நாட்கள் பதவி வகித்த பிரதமராக லிஸ்டிரஸ் உள்ளார்.

இதற்கு முன்பு 1768ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக இருந்த டியூக் ஆப் கிராப்டன் என்பவர் 471 நாட்களும், லார்டு கிரீன்வில்லே 407 நாட்களும் (1806), ஆலக் டாக்லஸ் ஹோம் 363 நாட்களும் (1963), யேள் ஆப் பியூட் 317 நாட்களும் (1762), யேள் ஆப் ஷெல்பர்ன் 266 நாட்களும் (1782), டியூக் ஆப் டெவோன்ரே 225 நாட்களும் (1756), போனர் லா 211 நாட்களும் (1922), தி விஸ்கவுண்ட் கோட்ரிச் 144 நாட்களும் (1827), டோறி ஜார்ஜ் கேன்னிங் 119 நாட்களும் (1927) பிரதமராக இருந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.