மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், செங்கல்பட்டு, தேனீ, தென்காசி, திண்டுக்கல், கோயம்பத்தூர், நீலகிரி, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.