சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெறும் அருங்காட்சியகம் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “கீழடி அருங்காட்சியகம் திறப்பது கால தாமதம் ஆவது ஒரு வகையில் நல்லது தான். கால தாமதமாக திறப்பதால் அதிக பொருட்கள் வைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
அருங்காட்சியக பணிகள் முழுவதும் முடிவடைந்துவிட்டது. காட்சிப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அருங்காட்சியகம் ஜனவரி மாதத்திற்க்குள் திறக்கப்படும் என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
முன்னதாக, கீழடி அருங்காட்சியகத்தின் கட்டடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.
“ 31 ஆயிரம் சதுர அடியில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருவதாகவும், தற்போது 17 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. அருங்காட்சியகம் கட்டி முடித்த உடன் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும் என தெரிவித்த அவர், கீழடி அருங்காட்சியக வடிவமைப்புகள், மாற்றம் செய்யப்படாது என ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.








