டயானா என்ற பெயர்… இந்த உலகத்தில் அழுத்தமாக பதிய காரணமானவர், மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாதான்… உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பின்னரும் பேசப்பட்ட டயானாவின் நினைவலைகள் இதோ…
பிரபலம் என்றாலே பிரச்னையும் கூடவே பொறந்த மாதிரி, எதாவது பிரச்னை பிரபலத்தை சுத்தி இருந்துக்கிட்டே இருக்கும். இனிப்ப கண்டு ஈ மொய்க்கிற கதையா, பத்திரிகை, கருத்து, சர்ச்சைன்னு…., எப்பவும் பரபரப்போட இருக்கிற அந்த பிரபலத்தோட வாழ்க்கையில, நிம்மதிய விட, சோர்வு தான் அதிகம் இருக்கும்…
எத செஞ்சோம், எத விட்டோம்னே தெரியாத ஒரு சந்தர்ப்பத்துல, அவங்க வாழ்க்கையும் முடிஞ்சு போயிடும்…. அப்படி, கண்ண மூடி யோசிக்கிறதுக்குள்ள, முடிஞ்சுப்போன ஒரு கதையோட கனவு நாயகி தான் டயானா…. 
பாத்த மாத்திரத்துல எல்லோருக்கும் பிடிச்சு போற அந்த பேரழகியோட வாழ்க்கை, அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுப்போகும்னு யாரும் நினைச்சிக் கூட பாக்கல… 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி, இங்கிலாந்தச் சேர்ந்த “எட்வர்ட் ஜான் ஸ்பென்சர்- பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே” தம்பதிக்கு மகளா பிறந்த டயானா, பள்ளிப்படிப்ப தொடரும் போது கூச்ச சுபாவம் உள்ளவராத்தான் இருந்தார். ஆனா, இசை, நடனம்னு தன்னோட திறமைகள் வளர வளர, பள்ளி படிப்ப வெற்றிகரமா முடிச்சவர், சுவிட்சர்லாந்தில் இளங்கலை படிப்பை முடிச்சு, கல்லூரி மாணவியா லண்டன் திரும்பின போது தான், எல்லோரையும் போல டயானா வாழ்க்கையிலயும் காதல்ங்ற பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சது…
இளவரசி ஆன டயானா
நாட்டோட இளவரசரா இருந்தாலும், சின்ன வயசிலேர்ந்தே சேந்து பழகின பையன் சார்லஸ். ரெண்டு பேருமே குழந்தை பருவத்தில ஒன்னா விளையாடினவங்கன்னான்லும், இளமை பருவத்துல காதல் பூக்கும் தானே… அப்படித்தான் இவங்களுக்குள்ளும் அந்த மாயம் நடந்தது. விளைவு, தன்னைவிட 13 வயது மூத்தவரான சார்லஸ, 1981ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, திருமணம் செய்தார் டயானா. சின்னத்தம்பி படத்துல வற்ர பெரிய வீட்டு கல்யாணம்னு மாதிரி, அந்த காலத்திலேயே 74 நாடுகள்ல, சுமார் 10 லட்சம் பேர் இவங்களோட திருமணத்தை தொலைக்காட்சி மூலமா பார்த்து ரசிச்சாங்க….. 
அதிகரித்த மனக்கசப்பு
காதல்.. திருமணம்… காதலின்னு, ஒரு கவிதை மாதிரி அமைஞ்ச வாழ்க்கையோட சாட்சியமா, வில்லியம்ஸ், ஹாரின்னு 2 குழந்தைங்க பிறந்தது. ஆனா, அதோட இவங்களோட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும்னு யாரும் எதிர்பார்க்கல. நாளடைவில, சார்லஸ் – டயானா தம்பதிக்கு இடையே மனக்கசப்பு அதிகரிக்க, 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் பிரிவதா, அதிகாரப்பூர்வமா அறிவிச்சாங்க..
இருந்தாலும் டயானா மீதிருந்த மீடியா மோகம் கொஞ்சமும் குறையல. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினார் டயானா. டயானா எங்க போனாலும் அத செய்தியாக்கவும், வீடியோ எடுக்கவும் எப்போதும் செய்தியாளர் கூட்டம் அவர சுத்திக்கிட்டே இருந்தது. அப்போது தான், எகிப்தில் உள்ள சினிமா தயாரிப்பாளரான டோடிஃபாயத் உடன் டாயானா டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. 
கார் விபத்தில் பலி
இந்த நிலையில் தான், 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், டோடிஃபாயத்தும் டயானாவும் காரில் சென்று கொண்டிருந்த போது, கார் விபத்துக்குள்ளாகி 3 பேருமே உயிரிழந்தனர்.
டயானாவின் மரண செய்தி உலகையே உலுக்கி எடுத்தது. பலர் டயானாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருத, பலர் திட்டமிடப்பட்ட விபத்து என குற்றம் சாட்டினர்… 
11 ஆண்டுகள் நீடித்த மரண வழக்கு
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட டயானா மரண வழக்கு விசாரணை முடிவு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2008ல் வெளியானது. அதன்படி, கார் ஓட்டுனர் சாலை விதிகளை மீறியதாலும், அவரது காரை பின் தொடர்ந்த பத்திரிகையாளர்களாலுமே விபத்து நடந்ததாக கூறப்பட்டது.
ஆனால், கார் ஓட்டுனர் பணி நேரத்தில் ஏன் மது போதையில் இருந்தார். விபத்தில் ஒரு காயம் கூட இல்லாத டயானா எப்படி உயிரிழந்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. 
தன்னுடைய மரண செய்தியிலும் மர்மத்தையே விட்டுச்சென்ற டயானா எனும் பேரழகி மறைந்த நாள் இன்று………..
- செய்திப்பிரிவு, நியூஸ் 7 தமிழ்







