’எப்புட்றா?’ மொமண்ட் – தெறிக்கவிடும் தென்காசி வீடு!

தென்காசியில் அடுக்கி வைத்த அட்டைப் பெட்டிகள் சரிந்து, கீழே விழுவது போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள வீடு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு…

தென்காசியில் அடுக்கி வைத்த அட்டைப் பெட்டிகள் சரிந்து, கீழே விழுவது போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள வீடு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். அந்தக் கனவு வீட்டை
எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் பயணித்து வருகிறோம்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெல்கம் நகர் பகுதியில் ஒருவர் கட்டியுள்ள வீடு, அப்பகுதி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. பொதுவாக வீடு வலுவாக இருக்க வேண்டும். இடிந்து விழுந்து விடக்கூடாது. நல்ல சிமெண்ட் கம்பி போன்ற மூலப் பொருட்களால் கம்பீரமாக கட்ட வேண்டும் என்றே
ஆசைப்படுவார்கள்.

அண்மைச் செய்தி : துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 24,000 ஆக உயர்வு

ஆனால் இவரோ, தனது வீட்டை, அட்டைப் பெட்டிகள் போன்ற தோற்றத்தில் கட்டி உள்ளார். அதுவும் அவை சரிந்து கிடக்கும் வகையில், தலைகீழாக, அந்தரத்தில் தொங்கியபடி கட்டி உள்ளார். இதனை தென்காசி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மேலும் வித்தியாசமான வீட்டை பார்க்கும் இளைஞர்கள், அந்த வீட்டின் முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.