நடிகை மஞ்சு வாரியர் தனது தோழிகளுடன் எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன், திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்ற மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்கத் தொடங் கினார். அவர் நடித்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், தமிழில் நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ படம் மூலம் தமிழுக்கும் வந்தார். இப்போது மரைக்கார்: அரபிக் கடலிண்டே சிங்கம், லலிதம் சுந்தரம், ஜாக் என் ஜில், படவெட்டு உட்பட சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.
இந்நிலையில், தனது தோழிகளான நடிகைகள் கீது மோகன் தாஸ், சம்யுக்தா வர்மா ஆகி யோரை சந்தித்து நேரத்தை செலவழித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். நடிகை கீது மோகன் தாஸ், இப்போது படங்கள் இயக்கி வருகிறார். சம்யுக்தா வர்மா, நடிகர் பிஜூ மேனனை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
இருந்தாலும் மஞ்சு வாரியர் தனது தோழிகளுடனான நட்பை தொடர்ந்து வருகிறார். இவர்களை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள மஞ்சு வாரியர், எப்போதும் நாங்கள் தோழிகள், என்ன வந்தாலும் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.








