இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால், 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, ஓவல் மைதானத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெர பிஸ்ட் நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஓட்டல் அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.