முக்கியச் செய்திகள் சினிமா

அஜித் நடிக்கும் ”விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? – வெளியான ரகசிய தகவல்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வங்கியில் நடக்கும் விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டி விழப்புணர்வு ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது. இப்படத்தை அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது. ஆனால் இயக்குநர் மட்டும் யாரென்று தெரியாமல் இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கடந்த வருடம் கலகத்தலைவன் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் ”விடா முயற்சி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அஜித் குமார் நடிக்கும் 62-வது படம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை கதையில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அடுத்த மாதம் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்தாண்டு பொங்கலில் படத்தைக் படத்தை வெளியிட படக்குழு  திட்டமிட்டு வருவதாகவும் கூறாப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

EZHILARASAN D

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்

Arivazhagan Chinnasamy

குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

Gayathri Venkatesan