தங்கம் வாங்க சரியான நேரம் எது? தங்க நகை வியாபாரிகள் சொல்வது என்ன?

பண்டிகை காலம் வருவதால் இரு வாரங்களுக்கு பின்னர் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை தங்க வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம்…

பண்டிகை காலம் வருவதால் இரு வாரங்களுக்கு பின்னர் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை தங்க வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று ரூ.42,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் தங்கம் 1 கிராம் ரூ.5,285க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி ஒரு கிராம் 73.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய தினத்தை விட 40 காசுகள் குறைவாகும்.

இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரமாக காலமாக தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், சென்னை தங்க வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில். ஒரு சவரன் 42 ஆயிரம் ரூபாய்க்கு வந்துள்ளது. மார்ச் 2023ல் விலை குறைந்திருந்தது அதன் பின்னர் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு 46,200 ரூபாயானது. ஒரு கிராம் 5775 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த 7 மாதங்களில் தங்கள் விலை சவரனுக்கு ரூபாய் 4 ஆயிரம் வரை குறைந்தது.
தங்கத்தின் விலை அவுன்ஸ் அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 31.1 கிராம் ஆகும். 2000 டாலராக இருந்த அவுன்ஸ் விலை. தற்பொழுது ஒரு அவுன்ச்ஸ் 1820 டாலராக விலை குறைந்ததுள்ளது.

அமெரிக்காவின் மிகமோசமான பொருளாதாரம் காரணமாக விலை குறைகிறது. இரண்டு வாரங்களுக்கு தங்கம் விலை குறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வாரத்திற்கு பின்னர் பண்டிகை காலம் வருவதால் விலை ஏற்றம் காண வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.