எப்போ கல்யாணம்? எனக்கேட்டு நச்சரித்த பக்கத்து வீட்டுக்காரர் – ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!

எப்போ கல்யாணம்? எனக்கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரரை, கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் சிரேகர் (45) என்ற நபர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில்…

எப்போ கல்யாணம்? எனக்கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரரை, கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் சிரேகர் (45) என்ற நபர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் அசிம் இரியான்டோ (60) என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வசித்து வந்துள்ளார். இதனிடையே இந்த முதியவர் சிரேகரிடம் ஏன் தனியாக இருக்கிறாய்? எப்போது கல்யாணம் செய்து கொள்வாய்? என அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் சிரேகர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று (ஜூலை 29) கடும் கோபத்துடன் முதியவர் இரியான்டோ வீட்டிற்குள், கட்டையுடன் சிரேகர் நுழைந்துள்ளார்.

முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிரேகரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டு முதியவரைத் தாக்கியதாக சிரேகர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.