துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். அவரது நடிப்பில் வௌியான ‘சீதா ராமம்’ திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இத்திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி வெளியீடாக கடந்த அக். 31ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படம் சுமார் ரூ.120 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







