#Kanguva ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

‘கங்குவா’ திரைப்படம் இன்னும் 2 மாதங்களில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ…

When is #Kanguva release? The latest update released by the film crew!

‘கங்குவா’ திரைப்படம் இன்னும் 2 மாதங்களில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது.

‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இணையவாசிகள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் பேசிதாவது, “கங்குவா முதலில் அக்.10ம் தேதி வெளியாக இருந்தது. வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வரவே ஞானவேல்ராஜா ரஜினி ரசிகர் என்பதால் கங்குவா வேறு நாளில் வெளியாக திட்டமிட்டுள்ளார். ஹிந்தியில் மல்டிபிளக்ஸில் கங்குவா வெளியாகவுள்ளது. கங்குவா மிகப்பெரிய ரிலீஸுக்கு காத்திருக்கிறது. கங்குவா இன்னும் 2 மாதங்களில் ரிலீஸ் ஆகும். ஹிந்தியிலும் வெளியாகுவதால் அதற்கும் ஏற்றவாறு ரிலீஸ் தேதியை அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள்.”

இவ்வாறு கங்குவா திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.