#BloodyBeggar திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது? வெளியான அப்டேட்!

‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர், நாளை மறுநாள் (அக்.18) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்களின் கவினுக்கு வெற்றி திரைப்படங்களாக மாறி…

‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர், நாளை மறுநாள் (அக்.18) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்களின் கவினுக்கு வெற்றி திரைப்படங்களாக மாறி இருக்கிறது. அவரது ‘டாடா’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மே திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘ஸ்டார்’ திரைப்படத்தை தொடர்ந்து கவின் நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ‘ப்ளடி பெக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் டிரெய்லர், நாளை மறுநாள் (அக்.18) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.