அயோத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள அயோத்தி திரைப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
அயோத்தி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், அயோத்தி திரைப்படம் வரும் மார்ச் 31-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரைக்கு வந்து சில வாரங்களிலேயே இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.