நீ எண்டு கார்டு வச்சா.. இவ டிரெண்ட மாத்தி வைப்பான்.. – 2025 #IPL-ல் விளையாடும் தோனி?

ஐபிஎல் -இல் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல்2024 கடந்த மார்ச்  22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று முடிந்தது.…

What kind of card do you have?.. Iva Trenda Mathi Vaipan.. - Dhoni playing in 2025 #IPL?

ஐபிஎல் -இல் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல்2024 கடந்த மார்ச்  22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. கடந்த ஐபிஎல் போட்டிகளைவிட இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் இது தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என கூறப்பட்டதால். போட்டியில் சென்னை வெல்லுமா? வெல்லாதா என்பதைவிட தோனியின் கடைசி சீசன் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஐபிஎல்2024 கோப்பையையும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தட்டிச் சென்றது.

ஆனால் அதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் கவலை அடையவில்லை. அவர்களின் கவலை எல்லாம் தோனி 2025 ஐபிஎல்-லிலும் விளையாட வேண்டும் என்பதுதான். சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே தோனி இன்னும் விளையாட வேண்டும் என பெரும் ஆசையோடு இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் RTM Card முறையும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

4 அல்லது 5 வீரர்களை தக்க வைக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த செய்தியும் வெளியாகி உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.