நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பது குறித்து வெளிநாட்டில் இருந்து கமல்ஹாசன் திரும்பியதும் முடிவு என கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. பாஜக அரசு மாற்றப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கக்கூடாது என கமல்ஹாசன் கருதுகிறார்.
காங்கிரஸ் தான் மாற்று என எண்ணத்தில் கமல் உள்ளார். ராகுல் காந்தியுடன் இணக்கமாகவும் இவர் இருக்கிறார். தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பது கமல்ஹாசன் வெளிநாட்டிலிருந்து வந்த பின் முடிவு செய்யப்படும்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததில் நியாயமான கருத்துள்ளதை புரிந்து கொண்டுள்ளோம். இந்தியா கூட்டணியில் செப்டம்பருக்குள் தொகுதிப் பங்கீடு முடியுமா? என கூற முடியாது. நிறைய கட்டங்கள் உள்ளது. கமல்ஹாசனின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.
இந்த முழு செய்தியை காணொளியாக காண: