விஜய தேவரகொண்டா – சமந்தா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சா…? – குஷி விமர்சனம்!…

s.J.சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடிப்பில் 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே தலைப்பில் வெளியான குஷி படம் டாப் ஹிட் கொடுத்தது. இன்னமும் எல்லாருடைய வாட்ஸ் ஆப் ஸ்டேடஸில் அந்த படத்தின் காட்சிகள், பாடல்களை…

s.J.சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடிப்பில் 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே தலைப்பில் வெளியான குஷி படம் டாப் ஹிட் கொடுத்தது. இன்னமும் எல்லாருடைய வாட்ஸ் ஆப் ஸ்டேடஸில் அந்த படத்தின் காட்சிகள், பாடல்களை காணலாம். அன்று வெற்றி கொடுத்த குஷி இன்றும் கைகொடுக்குமா என்று பார்க்கலாம்.

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் இத்திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்துள்ளனர். குஷி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.

படத்தின் கதையைப் பொறுத்தவரை சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாகும் காதலித்து கல்யாணம் செய்கின்றனர். பிறகு எது பேசினாலும் சண்டை பிரச்சனை என ஏதாவது ஒரு கோளாறு ஏற்படுகிறது. இது கடைசியில் எங்க போய் முடிகிறது என்பது தான் கதை. சமந்தா விஜய் தேவரகொண்டா கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த நடிகர்கள் இன்னும் நான்கு படங்கள் கூட ஒன்றாக பண்ணலாம் அந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது. முதல் பாதி லவ் ரொமான்ஸ் எல்லாம் போனாலும் இரண்டாம் பாதியில் சண்டை பிரச்சினையாக போய்க் கொண்டிருக்கிறது.

சில இடங்களில் இந்த செய்தால் தேவையே இல்லை என்று தோண வைக்கிறது. தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காதல் கதைகள் வந்துவிட்டன. இந்த படம் புதிய காதலை சொல்ல வருகிறது அப்படி என்று ஒன்றும் இல்லை. எல்லாம் அரைச்ச மாவு தான். இருந்தாலும் ஸ்க்ரீன் பிளே டயலாக் பாடல்கள் இவை எல்லாம் தான் ரசிகர்களை ஒரு படத்தை ரசிக்க வைக்கிறது. இதையெல்லாம் இந்த படத்தில் ஓரளவுக்கு பரவாயில்ல என்று சொல்லலாம்

எல்லோருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும் காதல் கதை எப்போதும் பார்க்க பார்க்க ஆர்வமாக இருக்கும். இதற்கு காரணம் நம் வாழ்க்கையில் ஏற்படும் crush, முதல் காதல் தான். இப்படி ஏதோ ஒரு இடங்களில் நம்முடைய பழைய நினைவுகளை தூண்டுவதால் காதல் படங்கள் எப்போதும் ஹிட் ஆகிவிடும். சில படங்களை ரசிகர்களே ஓட வைப்பார்கள் என்று சொல்வார்கள் அதே போல இந்த படத்தை காதலர்களே ஓட வைத்துவிடுவார்கள். ஏனெனில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களாக இருக்கட்டும், காட்சிகளாக இருக்கட்டும் செம்ம டச் கொடுக்குது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.